துதிப் பாடல்கள்

வருத்தப்பட்டு பாரம்

Varuthappattu Paaram

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் நண்பனே

உன் வருத்தம் நீக்க அழைக்கிறார் இயேசு உன்னை

வருவாய் ? வருவாய்?

உன் வேதனை மாற இயேசுவை நம்புவாய் - வருத்தப்பட்டு

1. வேதனையோடு கடந்து வந்தான் ஒரு குருடன்

வேந்தன் இயேசுவினால் நன்மை பெற்று

பார்வையடைந்தான்

நீயும் வருவாயா வருவாயா உன்

வேதனை மாற அவரை தேடுவாயா - 2 -வருத்தப்பட்டு

2. கலக்கத்தோடு கண்ணீர் விட்டாள் அன்பு சகோதரி

நேசர் இயேசுவினல் இரக்கம் பெற்று,

இரட்சிப்படைந்தாளே

நீயும் வருவாயா வருவாயா உன்

வேதனை மாற அவரை நம்புவாயா -2 -வருத்தப்பட்டு

3. வியாதியினால் கவலைப்பட்டுக்கடந்து வந்தான்

விண்ணவர் இயேசுவின் கரத்தினால் சுகம் பெற்றான்

நீயும் வருவாயா வருவாயா உன்

தேவனை மாற அவரை தேடுவாயா-2 -வருத்தப்பட்டு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு