வருகிறார் இயேசு ராஜன்
வானத்தின் மத்தியினில்-2
1. கண்ணீர் இல்லாத கவலையில்லாத
கானானில் நம்மை சேர்த்திடவே-2
கர்த்தராம் இயேசு மத்திய வானில்
சீக்கிரமாகவே வருகிறார்-2
2. நித்திய காலமாய் நித்திய வீட்டில்
நித்தியரோடு நாம் வாழ்ந்திடவே-2
நித்தமும் நம்மை பரிசுத்தமாக்கி
நீதியாக நாம் வாழ்ந்திடுவோம்-2
3. மறுரூபமாக்கி மகிமையில் சேர்க்க
மஹாராஜன் வருகிறார்-2
மகிமையிலே நாம் அவரோடு கூட
மகிழ்ந்து தினமும் வாழ்ந்திடுவோம்-2