வாழ்த்துகிறோம் - நாம் வாழ்த்துகிறோம்
தூயவனை நாம் போற்றுகிறோம் - (2)
அல்லேலூயா கீதம்
மகிபனை கர்த்தரை ஸ்தோத்தரிப்போம் - (2)
செங்கடல் தாண்டி நடத்தினோரே
என்றென்றும் நம்மோடிருப்பவரே - (2)
ஆர்ப்பரிப்போம் கை கொட்டுவோம்
நேற்றும் இன்றும் மாறாதவரே - (2)
வானமும் பூமியும் அவருக்கே
விண்மீன்கள் கோள்கள் அவரதுவே
சூரியனே சந்திரனே
கர்த்தரை வாழ்த்தி பாடுங்கள் - (2)
பெரியவரே சிறியவரே
வாலிபரே நாம் ஸ்தோத்தரிப்போம் - (2)
கன்னியரே குழந்தைகளே
தேவாதி தேவனை போற்றிடுங்கள் - (2)
மணவாட்டி சபையே துதித்திடுவோம்
ஆவியில் நிறைந்து ஸ்தோத்தரிப்போம் - (2)
ஊழியரே தலைவர்களே
இயேசுவை போற்றி புகழ்ந்திடுவோம்- (2)