வாழ்கவே உம் நாமமே
வரனுமே உம் ராஜ்ஜியமே.. - என்றும் - 2
உலகத்தலைவர் நீங்க தானே இயேசப்பா
உம்மை வாழ்த்தி வணங்கி
போற்றுகிறோம் நாங்கப்பா - 2 (பரலோக தலைவர்)
நிலையாக ஆட்சி செய்பவர்
உம்மைப்போல் யாரும் இல்லையே - 2
எங்கள் தலையை உயர்த்தும்
தலைவர் நீங்க தான்
எங்கள் முன்னே செல்லும்
முதல்வர் நீங்கதான் - 2
1. சாதி மத பேதமெல்லாம்
உம்மிடமில்லை - அதன் அடிப்படையில்
சலுகைகள் நீர் கொடுப்பதில்லை - 2
உண்மையாய் உம்மை கூப்பிடும்
மக்களுக்கு நன்மை செய்கிறீர்
கூப்பிட மறுக்கும் மக்களுக்கும் - உம்
கிருபையால் உதவி செய்கிறீர் - 2
2. ஊழல் உமது ஆட்சியிலே
நடப்பதில்லை - அப்படி செய்பவர்கள்
உம்மிடத்திலே நிலைப்பதில்லை - 2
உம்மிடம் உள்ள அனைத்தையும்
மக்களுக்கே கொடுத்து மகிழ்கிறீர்
மறைத்திட எதுவுமில்லை என்று
ஜீவனையும் கொடுத்து காட்டினீர்
3. லஞ்சம் வாங்கி நன்மைகள் நீர்
செய்வதில்லை - அப்படி செய்யும்
நிலைமை உமக்கு என்றும் வருவதில்லை - 2
உலகத்தை படைத்தவர் நீரே
மக்களுக்கு கொடுத்தவர் நீரே
நல்லவர் தீயவர் மீதும் - நீர்
மழையை பெய்யச்செய்பவரே