வாசற்படியில் நின்று நானும் தட்டுகின்றேன்
உன் மனக்கதவை திறந்து இடமும் தருவாயோ - 2
மலைகள் அசைந்தாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும்
என் கிருபை என்றும் விலகாதது - அது
உன்னிடையே என்றும் மறையாதது
மனம் நீ மாறி வந்தால் மகிமையை கண்டிடுவாய் - 2
மனம் திறந்தே உன்னை அழைக்கின்றேன் நான் - 2
உன்னை மீட்டிடவே மகிமையை துறந்து வந்தேன்
உன்னை மாற்றிடவே மரணத்தை ஜெயித்தெழுந்தேன்
கண்ணீர் துடைத்திடவே கவலை போக்கிடவே - 2
கனிவுடனே உன்னை அழைக்கின்றேன் நான் - 2