துதிப் பாடல்கள்

வாசல்களே தலைகளை

Vaasalgalae Thalaigalai

வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் அநாதி

கதவுகளே விலகியே நில்லுங்கள்

ஏன்? இராஜா வருகிறார்,

யார்? இயேசு ராஜா வருகிறார்

1. அலைகளெல்லாம் அவர்முன் அடங்கி நிற்கின்றது

உங்கள் தலைகளெல்லாம் அவர்முன் பணிந்து நிற்கட்டும் -(2)

குடைகளெல்லாம் அவர்முன் சுருட்டப்படட்டும் மனித

மகுடமெல்லாம் தரையில் குனிந்து வைக்கட்டும்

2. அவருக்கு ஆணையிட உலகில் மனிதர் இல்லை

அவருக்கு தடைவிதிக்க உலகில் நாவுகள் இல்லை -(2)

மனித பெருமையெல்லாம் ஒருநாள் மண்ணில் முடிவடையும்

பணியா தலைகளெல்லாம் ஒருநாள் தங்களைத் தான் அடிக்கும்

3. அவர் வரும்நாள் இன்னும் அதிக தூரம் இல்லை

அந்தோ உயிர்த்தெழும் நாள் மிகவும் சமீபமாயிற்றே -(2)

எரிநரகம் அல்லது என்றும் நித்தியம் மனிதர்

இறுதி பங்கு இதுவே தேவ சத்தியம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு