வாரும் என் இயேசு தேவனே அடியானைக் கண்
பாரும் என் இயேசு தேவனே -2
வாரும் அடியானுந்தன் பாதம் பணிந்தேன் தேவா - 2
வந்து திவ்யாசீர்வாதம் தந்து அரவணைக்க
அன்னை தந்தையிலும் மேலாய் அடியானின்மேல்
அன்பு கூர்ந்திட்ட அன்பரே -2
பாரக்குருசில் தொங்கிப் பாவம் அனைத்தும் போக்கி -2
நித்திய காலம் வாழ்ந்திட நித்திய ஜீவனளித்த
சாபத்தின் சந்ததியாக அவனிதனில்
அலைந்து அழிந்து எந்தனை -2
எந்தனை சாபம் அனைத்தும் போக்கி சொந்த தனயனாக்கி - 2
தீர்த்த சத்திய பரனே நித்திய என் பிதாவே
பரிசுத்த பாதை திறந்து பரிசுத்தராம்
உம்மையே பின்பற்றிட -2
பரிசுத்த ஜீவியத்தைப் பரனே எனக்களித்து -2
பரிசுத்தமாய் வாழ்ந்திட பலம்தந்து பாதுகாக்க
பரலோகில் சேர்த்துக்கொள்ள பரனே நீர்
அதிசீக்கிரம் வருவதாலே -2
ஆனந்தத்துடன் வாழ்ந்து அவனிதனில் அடியான் -2
அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடவே
அல்லேலூயா ஸ்தோத்திரம் அன்பருக்கு
அல்லேலூயா ஸ்தோத்திரம் பருக்கு -2
அல்லும் பகலும் உந்தன் அடிபணிந்து போற்றி -2
ஆனந்தத்துடன் உம்மை அவனியில் அறிவித்திட