வாரும் தேவா வாரும் தேவா - 2
பலவீனன் என்னை பலப்படுத்த வாரும் தேவா -2
நின் பலத்தால் பலப்படுத்தி - ஸ்திரப்படுத்தி நிலைநிறுத்த - 2
ஆதி பரிசுத்தர்களை பலப்படுத்தி பாதுகாத்தீர்
ஆதி திரு வல்லமையால் நிறைத்து நிலைநிறுத்தி காத்தீர்
அன்று போல இன்றும் செய்து - ஏழை என்னை பலப்படுத்த -2
ஆதி பரிசுத்தரைப் போல் பலமாய் சாட்சி கொடுத்திடவே
ஆதி பரிசுத்தரைப் போல் நற்சாட்சி பெற்று நடந்திடவே
ஆதி திரு கிருபையினால் - அடியான் என்னை பலப்படுத்த -2
சோதனையில் சோர்ந்திடாமல் அடியான் என்னை பலப்படுத்த
சோதனையை வென்றவரே சூழ்நிலையில் வந்து என்னை
சோர்ந்திடாமல் வென்றிடவே ஏழை என்னை பலப்படுத்த -2
ஆபத்துகள் அணுகிடாமல் அடியான் என்னை பாதுகாக்க
அகில சத்துருக்களையும் மேற்கொண்டு முன்னேறிச் செல்ல
அடியான் பிரகாசித்திட வாரும் மகிபா பலப்படுத்த -2
போர்க்களமாம் ஜீவியத்தில் விழித்திருந்து ஜீவித்திட
போர்க்களத்தில் விழித்திருந்து போர்புரிந்து ஜெயம் எடுக்க
போர் வீரரின் அதிபதியே -பலப்படுத்தி பாதுகாக்க - 2
உமது சாட்சியாம் அடியான் இரத்தசாட்சி ஆகிடவே
உமது பரிசுத்தாவியின் நிறைவினாலே நிறைத்து என்னை
உமது திருபலத்தினாலே - இடைகட்டியே நிலைநிறுத்த -2