வாரும் தேவா எங்கள் மத்தியில் இப்போ - நீர்
ஆசீர்வாதம் தந்திட - 2
வாக்குத்தத்தம் ஈந்த வல்லமை தேவனே - 2
எங்கள் மேல் இரங்கிடும் இப்போது - 2
பாவிகளை இன்று சந்திக்கும் தேவா நீர்
பாவ சாபம் விட்டு நீங்கிட
பரிசுத்தமாகிட பரலோகைப் பெற்றிட - 2
பாரினில் உம்மைப் பின்பற்றிட - 2
ஆவியின் அபிஷேகம் ஈந்திடும் தேவாநீர்
ஆவியின் பலத்தினால் ஜீவிக்க
ஆச்சரியப்பட்டிட உலகத்தார் யாவரும் - 2
தூய ஜீவியமதைக் கண்டு - 2
பலவீனப்பட்ட சுத்தர்கள் யாவரும்
பலனடைந்து முன்னேறிட - 2
பலமான ஜீவியம் பாரினில் செய்திட - 2
பணிந்து ஆவியால் நிறைத்திட - 2
ஆவியினால் நடத்திட அடியார்கள்
அடிபணிந்தோம் தேவா வந்திடும்
நானிலம் மீதினில் நற்சாட்சி பெற்றிட - 2
நாதா உம்மைப்பின் பற்றிட - 2
அதிகாரத்துடன் ஜீவித்து அடியார்கள்
அமலா உம்மை எங்கும் காண்பிக்க
ஆயனே எங்கட்கு அருள்புரிந்திடும் - 2
அடியார்களை அரவணைத்திடும் - 2