வாலிபரே வாலிபரே
வாருங்களேன் வாருங்களேன் (2)
இயேசுவின் நாமத்தில் ஜெபித்திடுவோம்
பொல்லாங்கனை ஜெயித்திடுவோம் (2)
வாலிபரே வாலிபரே
வாருங்களேன் வாருங்களேன் (2)
1. முழங்கால்களை நாம் முடக்கிடுவோம்
முடங்கினோர்களையே எழுப்பிடுவோம் - 2
இயேசுவின் அன்பினைக் கூறிடுவோம்
இயேசுவுக்காய் வாழச் செய்திடுவோம் (2) - வாலிபரே
2. தேசத்திற்காய் நாம் ஜெபித்திடுவோம்
சேனைகளாய் நாம் எழும்பிடுவோம் - 2
இயேசுவை இன்றே அறிவிப்போம்
இயேசுவின் சீஷராய் உழைத்திடுவோம் (2) -வாலிபரே
3. அழிந்து போகின்ற ஜனங்களையே
அழிவிலிருந்து மீட்டிடுவோம் - 2
பரலோகத்தை நம் இந்தியர்கள்
அனைவரும் நிரப்பிட உழைத்திடுவோம் - 2 -வாலிபரே