வாலிபனே உன் இளமையிலே சந்தோஷப்படு - 2
வாலிபமும் மாயை நீ வாழும் வாழ்க்கை மாயை - மாயை - 4
எல்லாம் மாயையே -
பொல்லாத உலகத்திலே உல்லாச வாலிபம்
சல்லாபம் செய்யச் சொல்லி உன்னையே அழித்திடும் - 2
துள்ளி குதிக்கச் சொல்லும் எள்ளி நகைக்கச் செய்யும் - 2
அள்ளிக்கொண்டு போன பின் தான்
எல்லாம் உனக்கு விளங்கிடும் - மரணம் - 2
டீன்னேஜ் காலத்திலே திசைக்கெட்டு போகாதே
மேரேஜ் நடக்குமுன்னே மதி கெட்டு அலையாதே
உள்ளத நானும் சொன்னால் என்மேல் கோபம் கொள்ளாதே
அண்ணனோட அட்வைசை நீ அலட்சியம் பண்ணாதே
ஆடிப்பாடி அழிந்த பின்னால் ஆண்டவர் மேல் பழிபோடாதே - -
கண்ணின் காட்சியிலும் நெஞ்சின் வழியிலும்
இஷ்டம் போல் நீ நடந்தால் இன்பமாய் இருந்திடும்
ஆனாலும் தேவன் உன்னை நியாயத்தில் நிறுத்திடுவார்
அப்போது அழுதிடுவாய் நகத்திலே விழுந்திடுவாய்