வாலிபனே இது உனக்கு நல்ல காலம்
வல்லமையாய் கிரியை செய்யும் நேரம் - 2
1. கர்த்தருக்காக நீ எழும்பிடும் நேரம்
காவலில் உள்ளோரை விடுவிக்கும் காலம் - 2
காத்திருந்து பெலன் அடைந்தாலே -2
கர்த்தருக்காய் நீ எழும்பிடலாமே
கர்த்தருக்காய் நீ கலக்கிடலாமே
2. பாழாய் கிடக்கும் ஸ்தலங்கள் பலவே
பழுது பார்க்க ஆட்கள் இல்லையே - 2
பரிசுத்த தேவனின் துணை கொண்டு நீயும் - 2
பாழானதை கட்டிடலாமே
பாரதத்தை நீ கலக்கிடலாமே
3. எகுவைப் போல எழும்பிடுவாயே
ஏசபேல்களை அழித்திடுவாயே - 2
கர்த்தரின் நாமத்தை எடுத்து நீ செல்ல(சொல்ல) - 2
கடைசி காலத்தில் ஆயத்தம் தானா - 2