வாலிபம் ஒரு மாயை.. மாயையே
வாலிபம் ஒரு மாயை... மாயையே - 2
வாலிபனே! உன் வாலிபக்காலத்தில்
கர்த்தரை நினைத்திடு
வாலிப பெண்ணே ! உன் வாலிபப்பருவத்தில்
கர்த்தரை நினைத்திடு.. ஓ.. ஓ.
1. வாலிபத்தில் எடுக்கின்ற தவறான முடிவுகள்
வாழ்க்கையை கெடுத்துவிடும்
உன்னை குறித்து தேவன்
வைத்திருக்கும் திட்டத்தை
நடக்காமல் தடுத்துவிடும்
தம்பி.. தங்கச்சி.... நீ - 2
வாலிபம் என்பது வாழ்க்கையில்
முக்கியமான பகுதி அதில்
அறிவோடு நீ நடந்து கொண்டால்
கிடைத்திடுமே தகுதி - 2
வாலிபமானது தற்காலிகமானது - 2
2. வாலிபத்தில் உனக்கு தவறாக போதிக்கும்
நண்பனை கண்டித்து விடு (தோழியை)
அவன்(ள்) தொடர்ந்து செய்தால்
நட்பே வேண்டாம் உடனே துண்டித்துவிடு
தம்பியே... தங்கச்சி (உன்)-2
3. வாலிபத்தில் உன்னை கெடுத்திட நினைத்திடும்
தந்திரத்தை அறிந்து விடு - அதை
அறிந்து புரிந்து நடந்து கொள்ள
வேதத்தை படித்துவிடு
தம்பி.. தங்கச்சி... (உன்)-2