வா மகனே .... வா மகனே -2
என் சினேகத்தைப் பார்த்து நீ இன்று வா மகனே -2
1. என் சினேகத்தை அறிந்து நீ என்னை சினேகித்திட -2
கல்வாரியின் சினேகத்தை பார் மகனே -2
2. உன் உற்றாரோ பெற்றாரோ உறவினர் பெந்துக்களோ -2
என்னைப்போல் சினேகித்தது யார்மகனே -2
3.உன் நண்பர் சினேகிதரோ உன்மனைவி மக்களோ -2
என்னைப்போல் சினேகித்தது யார்மகனே -2
4. என் சினேகத்தை மறந்து அவனியில் ஜீவித்திட -2
என் சினேகத்திற்கு நிகரானதொன்றை சொல் மகனே -2
5. உத்தியோகமோ உயர்வோ மதிப்புகள் பட்டங்களோ -2
என் சினேகத்திற்கு நிகராமோ பார் மகனே -2
6. பேர் பிரஸ்தாபங்களோ பாக்கியங்கள் பதவிகளோ- 2
என் சினேகத்திற்கு நிகராமோ பார் மகனே- 2
7. பாவத்தைச் செய்துமா கோபத்திற்குள்ளாகி -2
ஆபத்தை வருவித்தாய் நீ மகனே -2
8. உன்மேல் வரும் சிட்சையை நான் சுமந்தேன் மகனே -2
உன்னை இரட்சித்திடவே பார்மகனே -2
9. உன்னை சினேகித்து நான் உயிர்கொடுத்தேன் மகனே -2
உன்னை உயிர்ப்பித்திட வா மகனே -2