உயிருள்ள என் தெய்வமே - எனக்கு
உயிர் தந்த என் தெய்வமே - (2)
உம்மையே நீர் எனக்காய் தந்தீர்
என்னையே நான் உமக்குத் தருகிறேன் -(2) - உயிருள்ள என்
1.உதவியின்றி தவித்து நின்றேன்.
அருகில் வந்து உதவி செய்தீர். - (2)
உருக்கமான இரக்கத்தினால்
என்னை அணைத்து சேர்த்து மகிழ்ந்தீர் - 2 - உயிருள்ள என்
2.கலக்கம் நிறைந்த இவ்வுலகில்
கலக்கத்தோடே வாழ்ந்து வந்தேன். - (2)
கலங்காதே என்று கரம் பிடித்தீர்
கல்வாரி அன்பை எனக்குத் தந்தீர். - (2) -உயிருள்ள என்
3.பாவம் நிறைந்த பாழ் உலகில்
பாவி நானும் வாழ்ந்து வந்தேன். - (2)
பரிசுத்தமான உந்தன் இரத்தத்தை
எனக்காய் சிந்தி மீட்டுக் கொண்டீர். -(2) - உயிருள்ள என்