துதிப் பாடல்கள்

உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்

Uyirthezhundha Kiristhu Naadhan

உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன் உயிரோடிருப்பதால்

பாவ சாபம் நீக்கி நம்மை சொந்தமாக்கியதால்

ஜீவ காலமெல்லாம் மரண பயத்தைப் போக்கியே

நித்திய ஜீவனீந்ததால்

அல்லேலூயா கீதம் பாடி மகிழ்வோம்

ஆனந்தமாக நாம் ஸ்தோத்திரித்து

நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு தேவனை

அவர் அடி பணிந்துமே

பாதகனாய் பாவத்தில் மரித்த பாவியை

பூதலத்தின் புகழை நம்பி கெட்ட துரோகியை

மனுஷர் மகிமையை நாடி மாண்ட நீசனை

தேடி மீட்டுக் கொண்டதால்

சரீர மீட்பு தரும்படி நம் நாதன் வருவதால்

இமைப் பொழுதில் மறுரூபமடைவார் சுத்தர்களெல்லாம்

சத்திய ஆவியினால் முத்திரித்து நம்மைக் கொண்டனர்

சத்திய சாட்சியாகவே

தேவ மகிமைக் கென்று நம்மை மகிபன் அழைத்ததால்

வாக்குத்தத்தம் வரைந்து தந்து மகிழச் செய்ததால்

நித்திய ஸ்தலம் ஒன்று ஆயத்தப்படுத்தப் போனதால்

என்றும் விழித்திருப்போமே

பரம இயேசு பக்தர்களைச் சேர்த்துக் கொள்ளவே

ஆகாயத்தில் வெளிப்படுவார் ஜெகத்தை நோக்கியே

சுத்தர் அன்று பறந்து போவார் சுகித்திருக்கவே

நித்திய காலமாகவே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு