துதிப் பாடல்கள்

உயிர்த்தாரே உயிர்த்தாரே

Uyirthaarae Uyirthaarae

உயிர்த்தரே உயிர்த்தரே

உன்னதர் இயேசு உயிர்த்தாரே - 2

சாவினை வென்று உயிர்த்தாரே

சாத்தானை ஜெயித்து உயிர்த்தாரே - 2

1. கல்லறை திறந்திட உயிர்த்தாரே

காவலர் நடுங்கிட உயிர்த்தாரே - 2

நீதிமானாய் நம்மை மாற்ற

நீதியின் தேவன் உயிர்த்தாரே - 2

2. மரித்த இயேசு உயிர்த்தாரே

மரியாள் கண்டிட உயிர்த்தாரே - 2

அகிலமெங்கும் ஓடி சொல்ல

அன்பர் இயேசு உயிர்த்தாரே - 2

3. தேவ மகிமையில் உயிர்த்தாரே

தேவ சாயலில் உயிர்ப்போமே - 2

உயிர்த்த இயேசு திரும்ப வருவார்

உயிரோடு என்றும் ஆளுவோம் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு