உயிரோடு உயிரானீரே - எந்தன்
மனதாளும் நினைவானீரே - சிந்தைக்கு விருந்தானீரே
எந்தன் நோய் தீர்க்கும் மருந்தானீரே - 2
இந்த பூமியிலே நானோ பரதேசி
உந்தன் மெய்யான வார்த்தைகளால் உயிர் வாழ்கிறேன்
வழி சத்யம் ஜீவன் நீரே - என்
வாழ்க்கைக்கு ஒளியானீரே - 2
பஞ்சம் வந்தாலும் பசி நேர்ந்தாலும் - அது
உம்மன்பை விட்டு என்னை பிரிக்காதையா - 2
தாயிலும் உயர்ந்தவரே தந்தையிலும் மேலானீரே - 2
பெற்ற தந்தையிலும் மேலானீரே - 2
உம்மைகாட்டி தந்தேன் உம்மை மறுதலித்தேன்
கொடும் சிலுவையிலே உமை நானும் அறைந்தேனையா !
ஆனாலும் அழைத்தீரையா இயேசையா
அன்போடு அணைத்தீரையா
மார்போடு அணைத்தீரையா - 2