துதிப் பாடல்கள்

உயர்த்துகிறோம் உம்மைப் போற்றுகிறோம்

Uyarthugirom Ummaip Potrugirom

உயர்த்துகிறோம்.. உம்மைப் போற்றுகிறோம் - 2

என்னைக் காண்பவர்… காப்பவர்

துதிகளில் பயப்படத்தகுந்தவர் -

நீர் நல்லவர்… வல்லவர்

துதிகன மகிமைக்குப்பாத்திரர் -

நீர் உயர்ந்தவர்.. சிறந்தவர்..

எங்களின் துதிகளில் மகிழ்பவர்… உயர்த்துகிறோம்..

1. இந்த நாளில் எங்கள் நடுவில் இறங்கி வாரும்

அற்புதங்கள் அதிசங்கள் காணச்செய்திடும் - 2

என் இயேசுவே..என் தெய்வமே..

இம்மானுவேலர்.. என் இரட்சகர் -

2. கால்கள் யாவும் முடங்கும் நாவு யாவும் முழங்கும்

கர்த்தரே தேவனென்று அறிக்கை செய்திடும் - 2

என் இயேசுவே.. என் தெய்வமே..

யேகோவா ராஃபா.. பரிகாரி நீரே

3. உம்மைப்போல நல்ல தேவன் யாரும் இல்லை

உம்மைப்போல பரிசுத்தரும் பூவில் இல்லையே.. -2

என் இயேசுவே..என் தெய்வமே..

யேகோவா ஷாமார்.. காப்பவர் நீரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு