துதிப் பாடல்கள்

உத்தமனுக்கு கர்த்தர் துணையாவார்

Uthamanukku Karthar Thunaiyaavaar

உத்தமனுக்கு கர்த்தர் துணையாவார்

நீதிமானுக்கு கர்த்தர் ஜெயம்

கொடுப்பார் என்றும் - 2

ஜெயம் கொடுப்பார் ஜெயம் கொடுப்பார்

நீதிமானுக்கு ஜெயம் கொடுப்பார் - 2

துணை இருப்பார் துணை இருப்பார்

உத்தமனுக்கு துணை இருப்பார் - 2

1. நீதிமானுக்கு வரும் துன்பங்கள் ஏராளம்

ஆனாலும் கர்த்தர் நின்று விடுவிப்பாரே - 2

நீதிமான் பனையைப்போல்

செழித்திருப்பான் - அவன்

துன்பத்தை பார்த்து சிரித்திடுவான் - 2

காரணம் கர்த்தர்

அவனோடு இருக்கின்றாரே - 2

2. நீதிமானுக்கு என்றும் விரோதமாக

எழும்பும் ஆயுதம் வாய்க்காதே - 2

நீதிமான் கைவிடப்படுவதில்லை - அவன்

சந்ததி அப்பத்திற்காய் திரிவதில்லை - 2

3. நீதிமானுக்கு இன்றும் எதிராய் பேசும்

வாயின் வார்த்தைகள் வீண்தானே - 2

நீதிமான் வேர் என்றும்

அசைவதில்லை - அவன்

கனிதர இன்றும் மறுப்பதில்லை - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு