துதிப் பாடல்கள்

உருண்டோடும் இந்த உலகில்

Urundodum Indha Ulagil

உருண்டோடும் இந்த உலகில்

உந்தன் அன்புக்கு இணையேது தேவா

ஈடில்லா தூய அன்பு என் நேசரின்

பாச அன்பு கண்களை திறந்த அன்பு

அது கல்வாரி சிலுவை அன்பு

பரிசுத்தம் நிறைந்த அன்பு அது

பாவத்தை கழுவும் அன்பு

பாசத்தில் நடத்தும் அன்பு அது

பரலோகம் சேர்க்கும் அன்பு

பார் போற்றும் தூய அன்பு அது

பகைதனை மாற்றும் அன்பு

நீதியைக் கூறும் அன்பு

அது நித்தியம் நிலைக்கும் அன்பு

உலகத்தின் அன்பு மாயை

அதை நம்பியே வாழ்வை இழந்தேன்

உம்மிடம் ஓடி வந்தேன் என்னை

அன்போடு அணைத்துக் கொண்டீர்

சுகம் தேடி அலைந்து திரிந்தேன்

என் நிலைமாறி சோகம் அடைந்தேன்

நிம்மதி உன்னில் கண்டேன்

என்னை உமக்காக வாழச் செய்தீர்

நான் ஒன்றும் இல்லை தேவா

உந்தன் அன்பிற்கே அடிமையானேன்

என் வாழ்வை உமக்குத் தந்தேன் என்னை

ஆண்டு நடத்திடும் தேவா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு