உன்னோடேகூட நான் இருந்து,
உன்னை ஆசீர்வதிப்பேன்;
உனக்கும் உன் சந்ததிக்கும்
இந்தத் தேசத்தை தருவேன்
நீ போகையிலும் நீ வருகையிலும்
உன்னை ஆசீர்வதிப்பேன்;
உன்னை ஆசீர்வதிப்பேன்
ஆசீர்வாதமாய் இருப்பாய்
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் - 2
1. நீ செய்யும் உன் வேலைகளை
நான் ஆசீர்வதிப்பேன் - 2
2. உன் கர்ப்பத்தின் கனியையும்
நான் ஆசீர்வதிப்பேன் - 2
3. உன் நிலத்தின் கனிகளையும்
நான் ஆசீர்வதிப்பேன் - 2