துதிப் பாடல்கள்

உன்னைத்தாக்க உருவாக்க படும்

Unnaithaakka Uruvaakka Padum

உன்னைத்தாக்க உருவாக்க படும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும்...வாய்க்காதே போகும் -2

கர்த்தர் உனக்கய் யுத்தம் செய்வார்

அவரே உனக்காய் வழிதிறக்கச்செய்வார் -2

1. உனக்கு விரோதமாய் எழும்பும் வாய்களை

நீ தான் குற்றப்படுத்துவாய் -2

வழக்கிலே உன்னை தோற்கடிக்கச் செய்பவன் யார்

நீதான் வெற்றி பெறுவாய் -2

கலங்கிட வேண்டாம்

பயப்பட வேண்டாம்

கர்த்தர் உதவி செய்வார் - நீ -2

2 பொல்லாத மனுஷர்களின்

கைக்கு தப்புவித்து உன்னோடு - அவர்

இருப்பதை காட்டிடுவார் -2

பலவந்தரின் கைக்கு

உன்னை நீங்கலாக்கியே - கர்த்தர்

உன்னை விடுவித்திடுவார் - 2

3. உன்னோடு யாருமில்லை என்றே எதிர்த்தவர்கள்

ஏழு வழியாக ஓடிப்போவார்கள் -2

உனக்காக வழக்காட கர்த்தரே இருப்பதால்

பலம் கொண்டு திடனாயிரு

பலம் கொண்டு திடமனதாயிரு.

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு