துதிப் பாடல்கள்

உன்னை காக்கும் படிக்கு

Unnai Kaakkum Padikku

உன்னை காக்கும் படிக்கு

உன்னோடு இருக்கின்றேன் - 2

மகனே! மகளே

பயப்படாதே உனக்கு

துணையாய் இருப்பேன்

கலங்கிடாதே கரத்தால் மூடுவேன் - 2

இம்மட்டும் நான் காத்தவரே

இனிமேலும் காத்திடுவேன்

இம்மட்டும் நான் காத்தவரே

இனிமேலும் உன்னை காத்திடுவேன்

கலங்காதே திகையாதே - 2

தகப்பனும் தாயும்

உன்னை மறந்து போகலாம்

உறவினரும் உதறி தள்ளலாம் - 2

கருவினிலே கண்டவர் நான்

தெருவினிலே விடுவேனோ

கருவினிலே உன்னை கண்டவர் நான்

தெருவினிலே விட்டு விடுவேனோ

உலகத்திலே நாளும்

உபத்திரம் உண்டு

மறந்து விடு உதறி விடு - 2

நான் உன்னை நினைக்கின்றேன்

இன்று முதல் நான் ஆசீர்வதிப்பேன்

நான் உன்னை நினைக்கின்றேன்

இன்று முதல் நான் உன்னை

ஆசீர்வதிப்பேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு