துதிப் பாடல்கள்

உன்னதவரே உயர்ந்தவரே

Unnadhavarae Uyarndhavarae

உன்னதவரே உயர்ந்தவரே

உன்னதப்பாட்டின் மறைபொருளே

அழகான சாரோன் ரோஜாவே . . ஓ . . ஓ . .

பள்ளத்தாக்கின் லீலிமலரே

பாலில கழுவப்பட்ட கண்கள் கொண்ட கண்ணாளரே

கந்தவர்க்க பாத்திகள் போலே அழகு கன்னம் கொண்டவரே

அங்கமெல்லாம் இந்திர நீலம் வாசனையோ வெள்ளைப் போளம்

நான் விரும்பும் நேசரே இயேசு மணவாளரே

பிரியமே ரூபவதி என்று என்னை அழைப்பவரே

பரிசுத்த முத்தம் தந்து என் மனதை கவர்ந்தவரே

கன்மலையின் வெடிப்பினிலே சிகரங்களின் மறைவினிலே

என்னழகை கண்டவரே வெண்புறாவே என்றவரே

நான் விரும்பும் நேசர் உம்மை காண தினம் காத்திருப்பேன்

என் மேல் மனதாகுமட்டும் உம் நினைவில் வாழ்ந்திருப்பேன்

மேகமதில் வந்திடுவீர் சோகமதை தீர்த்திடுவீர்

தன்னோடு கூட்டிச் சென்று மணவாட்டியாக்கிடுவீர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு