உண்மையின் தேவனல்லோ
எங்களின் ராஜனால் - உம்மையே
நான் பாடுவேன் - இயேசய்யா
வையகம் யாவும் கூறுவேன் -உம்மைப்பற்றி
வையகம் யாவும் கூறுவேன் -உண்மையின்
1. ஐம்பெரும் காயம் அடைந்தீரே -என்னை
ஆறுதல் படுத்திடவே-உம்
அன்பினால் என்னை அரவணைத்தீர்
ஆசை முகத்தாலே -உண்மையின்
2. செந்நீர் சிந்தி சீற்றம் கொள்ளாமல்
சிரித்தீர் பாசத்தாலே
பாவி எனக்காய் பரிந்து பேச
மரித்தீர் அன்பாலே -உண்மையின்
3. உம்மை நானும் உணர்ந்துகொண்டேன்
உலகத்தின் தேவன் என்று
ஊக்கத்தோடு நானும் சொல்வேன்
உம் வழி நல்லதென்று -உண்மையின்