துதிப் பாடல்கள்

உங்க நாமம் உயர்த்தும்

Unga Naamam Uyarthum

உங்க நாமம் உயர்த்தும் எல்லா இடத்திலும்

நீங்க சீக்கிரமாய் வந்து அமருங்க

இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

நீங்க சீக்கிரமாய் வந்து அமருங்க

பயங்கரத்தாலே வாழ்ந்திடுவோரை

அன்போடு அணைத்துத் தேற்றிடுங்க

உறவுகள் உடைந்து வாழ்ந்திடுவோரை

ஒன்றாகக் கூட்டிச் சேர்த்திடுங்க

இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

நீங்கள் சீக்கிரமாய் வந்து அமருங்க

கடன் தொல்லையாலே கதறிடுவோரை

கண் நோக்கிப் பார்த்துத் தேற்றிடுங்க

கடன் கொடுப்பாய் கடன் வாங்கமாட்டாய் - என்ற

வார்த்தையை நீங்க நிறைவேற்றுங்க

இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

உங்க வார்த்தைகளை நிறைவேற்றுங்க

வியாதியினாலே வாடிடுவோரை

அன்போடு அணைத்துச் சுகமாக்குங்க

யேகோவா ராப்பா உம் தழும்புகளாலே

கரத்தை நீட்டிக் குணமாக்குங்க

இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

நீங்கள் சீக்கிரமாய் குணமாக்குங்க

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு