துதிப் பாடல்கள்

உங்க கிருபையாலே நிற்கிறேன்

Unga Kirubaiyaalae Nirkiren

உங்க கிருபையாலே நிற்கிறேன் நான் இயேசப்பா

என்னோட பெலன் இல்ல என்னோட அறிவில்ல

என்னோட உழைப்பில்ல என்னோட திறமை இல்ல

எதற்கும் உதவாத என்ன உயர்த்தி வச்சீங்க

இனி நான் இல்ல எல்லாமே நீங்கதானப்பா -(4)

நம்பின மனிதரெல்லாம் கைவிட்ட போதும்

நம்பிக்கை துருகமாக நீங்க இருக்கீங்க

நட்டாத மரமும் வெட்டாத துரவும் தந்து

நன்மையினால் என்னை நிரப்புனீங்க

தடைகளும் தோல்விகளும் மீண்டும் மீண்டும் வந்தும்

துவண்டு போகாத துணிவ தந்தீங்க

தனியாய் போராடி தடுமாறி சோர்ந்த போதும்

தோல்வியை முறியடிக்கும் திடன் தந்தீங்க

எடுத்த முயற்சியெல்லாம் வீணான போதும்

என்னை தேற்றிடவே நீங்க வந்தீங்க

எழுப்பவும் முடியாமல் பலனற்று இருந்த நேரம்

உம்கரம் தந்து என்ன தூக்கினீங்க

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு