உங்க கிருபையால தானே உங்க கிட்ட வந்தேன் நானே
உங்க இரக்கத்தால தானே என்னை இழுத்துக்கொண்டீர் நீரே -2
உங்க கிருபை மட்டும் கிடைக்காமல் போயிருந்தா
உங்ககிட்ட வராமலே நான் போயிருப்பேன்
உங்க இரக்கம் மட்டும் இல்லாமல் போயிருந்த
இந்நேரம் இல்லாமலே போயி ருப்பேன் நான்
தகுதியே இல்லாத எனக்கு இயேசுவே
நீங்க தந்த ஈவுதானேஉந்தன் கிருபை-2
சீர்கெட்ட என்னையும் சீராக்கி பார்த்தது-2
இயேசுவே உந்தன் உண்மையுள்ள கிருபை-2
அந்நியனும் பரதேசியாய் இருந்த என்னையும்
உந்தன் முன்னே நிறுத்தியது உந்தன் கிருபை-2
எளியவன் என்னையும் குப்பையில் இருந்து-2
எடுத்து உயர்த்தியது உந்தன் கிருபை-2
நோவாவுக்கு அன்று கிடைத்த கிருபை
இயேசுவை உம்மாலே எனக்கு கிடைத்தது-2
இதுவரை என்னையும் நடத்திய கிருபை-2
கடைசி வரை என்னை நடத்திடும் கிருபை-2