துதிப் பாடல்கள்

உங்க அன்புக்கு முன்னால நான் ஒன்னுமில்ல

Unga Anbukku Munnaala Naan Onnumilla

உங்க அன்புக்கு முன்னால நான் ஒன்னுமில்ல

இந்த களிமண்ணு எப்பவுமே உங்க செல்லபுள்ள

எத்தனை முறை நானும் மறுதலிச்சேன்

அத்தனை முறையும் நீங்க மன்னிச்சிட்டீங்க

இத்தனைக்கும் நான் ஒன்னும் நல்லவனில்ல

எத்தன் என்னையும் நீங்க ஏத்துக்கிட்டீங்க

எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்

உங்க அன்புக்கேற்றதா இப்பாத்திரம்-2

சேறு சகதியில சிக்கிக்கிட்டிருந்த என்ன

சீறாகத்தூக்கி விட்டு

இயேசு ரத்தத்தில என்னக் கழுவி நல்லா

என்மேல அன்பு வைக்க

எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்

உங்க கிருபைக்கேற்றதா இப்பாத்திரம்-2

முதலும் தெரியாம முடிவும் புரியாம

மூச்சு விட்டுகிட்டு இருந்தேன்

முதலும் முடிவும் நீர் எனக்கு விடிவு நீர்

என்னையும் தேடி வந்தீர்

எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்

உங்க தயவுக்கேற்றதா இப்பாத்திரம்-2

ஆறு கடக்கையிலும் அக்கினி நடுவினிலும்

அன்பாக மூடிக்கொண்டீர்

யாருக்கும் இல்லாத பாக்கியம் தந்தென்னை

தோள்மேல தூக்கிக் கொண்டீர்

எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்

உங்க நினைப்புக்கேற்றதா இப்பாத்திரம்-2

எங்கு தேடியும் எனக்கு கிடைக்காத

சுத்தத் தங்கம் நீரே

எங்கு போனாலும் கூட இருக்கின்ற

யெகோவா ஷம்மா நீரே

எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்

உங்க உண்மைக்கேற்றதா இப்பாத்திரம்-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு