துதிப் பாடல்கள்

உந்தன் துக்கம்

Undhan Thukkam

உந்தன் துக்கம் சந்தோஷமாகும்

இயேசுவின் நாமத்தில் வெற்றி - 3

உந்தன் துக்கம் சந்தோஷமாகும்

இயேசுவின் நாமத்தில் வெற்றி மேல் வெற்றி

இயேசுவின் நாமத்தில் வெற்றி - 2

ஆ ஆ ஆ ஆ

1. தேவனால் கூடாத காரியம் ஒன்றில்லை

தேடிடு அவரால் வெற்றி

உன்னாலும் ஆகாத காரியமில்லை

உணர்ந்திடு அவரால் வெற்றி - 2

இதயத்தில் விசுவாசம் உண்டாகுமாயின்

இடம் பெயரும் மலை வெற்றி

உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்ற

உண்மையை உணர்ந்தால் வெற்றி - 2

2. உந்தன் விசுவாசம் உலகத்தை வெல்லும்

உணர்ந்து போராடினால் வெற்றி

தந்திட்டார் பரத்தின் திறவுகோல் உன்னிடம்

திறந்திடு நிச்சயம் வெற்றி - 2

மைந்தனின் நாமத்தில் கேட்பவை யாவும்

மண்ணுலகில் வரும் வெற்றி

உன்னத் மைந்தன் இயேசு என்று நம்பும்

உன்னையன்றி யாருக்கு வெற்றி - 2

3. புவியில் கட்டிடும் யாவும் பரத்தில்

கட்டப்படுவதால் வெற்றி

அவருடன் நம்மை அமர்ந்திட செய்தார்

அடைந்தோம் அதனால் வெற்றி - 2

சத்துருவை நீ எதிர்த்து நின்றுல்

சடுதியாய் ஓடுவான் வெற்றி

கர்த்தரின் கையில் நீ ராஜமுடியும்

கிரீடமுமாவாய் வெற்றி - 2

வெற்றி உனக்குத்தான் வெற்றி

வெற்றி நிச்சயம் வெற்றி

வெற்றி உனக்குத்தான் வெற்றி

வெற்றி நிச்சயம் வெற்றி

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு