உந்தன் கிருபைதான்
என்னை வாழ வைத்தது
உந்தன் கிருபைதான்
என்னைப் பாட வைத்தது
என்னிலும் ஒன்றும் இல்லை ஐயா
எல்லாமே உந்தன் கிருபையய்யா
ஆயக்காரனைப் போல் இருந்தேன்
அணைத்துக் கொண்டீரே - 2
பாவியாகிய எந்தனின் மேல்
பாசம் வைத்தீரே
உண்மையுள்ளவன் என்று கருதி
ஊழியம் தந்தீரே - 2
ஆசரியக் கூட்டத்தோடு
சேர்த்துக் கொண்டீரே - 2
வாங்குகின்ற மனிதனாக
வாடி நின்றேனே - 2
அள்ளிக் கொடுக்கும் மனிதனாக
ஆசீர்வதித்தீரே - 2