உனக்காக பிறந்தேனே
உனக்காக என்னைக் கொடுத்தேனே (2)
உனக்காக பழி சுமந்தேனே
உனக்காக பலியானேனே
என்ன செய்தாய் நீ எனக்காக? (2)
1.பிதாவின் அன்பை வெளிப்படுத்த இரட்சகராக பூமி வந்தேன் (2)
என்னை ஏற்றுக்கொண்டாயோ
உலக வாழ்வில் மிதந்தாயோ (2)
யோசித்துப்பாரு என் மகனே
யோசித்துப்பாரு என் மகளே
2. இரகசியமாக நானே வருவேன் பரிசுத்தமானதை அழைத்துச் செல்வேன் (2)
அப்போது வருவாயோ - பின் எப்போது வருவாயோ (2)
யோசித்துப்பாரு என் மகனே
யோசித்துப் பாரு என் மகளே
3. நியாயத் தீர்ப்பின் நாளினில் வருவேன் நியாயாதிபதி நீதி செய்வேன் (2)
மன்னிக்கவும் மாட்டேனே
மனதுருகவும் மாட்டேனே
யோசித்துப்பாரு என் மகனே
யோசித்துப்பாரு என் மகளே
எனக்காக பிறந்தீரே
எனக்காக தன்னை கொடுத்தீரே (2)
எனக்காக பழி சுமந்தவரே
எனக்காக பலியானவரே
எதையும் செய்வேன் தேவா உமக்காக
எதையும் செய்வேன் தேவா உமக்காக
எனக்காக பிறந்தீரே
எனக்காக தன்னை கொடுத்தீரே (2)