துதிப் பாடல்கள்

உன் உள்ளத்திலே விசாரங்கள்

Un Ullathilae Visaarangal

உன் உள்ளத்திலே விசாரங்கள்

பெருகுகையில் ஏன் கலங்குகிறாய்

ஆத்துமாவே நீ ஏன் சோர்ந்தாய்

உன் நம்பிக்கையை இழக்காதே

ஆறுதல் தரும் தேவன்

எப்போதும் துணை நிற்கிறார்

இன்றே வா இன்றே வா

இயேசுவிடம் நீ வா

சத்துருக்கள் உன்னை சூழ்கேயிலே

உந்தன் கால்கள் இடர்கையிலே

உலகம் உன்னை எதிர் கையிலே

இயேசு உன்னை அனைத்திடுவார்

கர்த்தரே உந்தன் அடைக்கலம்

அவரே உந்தன் நம்பிக்கை

தேவனின் வார்த்தை கேடயம்

அவரே உனக்கு ஜீவிதம்

இன்றேவா இன்றே வா

இயேசுவிடம் நீ வா

சோர்வின்றி ஜெபமே செய்திடுவாய்

ஜெபமே ஜெயமென உணர்ந்திடுவாய்

ஜெபமே உன்னை வழிநடத்தும்

ஜெபமே உன்னை காத்துக் கொள்ளும்

உலகின் ராஜா இயேசுவே

நீதியின் சூரியன் இயேசுவே

துக்கத்தை களிப்பாய் மாற்றுவார்

வாழ்வில் ஜெயமே தருகிறார்

இன்றேவா இன்றே வா

இயேசுவிடம் நீ வா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு