துதிப் பாடல்கள்

உம்மையன்றி யாரை நான்

Ummaiyandri Yaarai Naan

உம்மையன்றி யாரை நான் ஆராதிப்பேன்

உம்மை தான் இயேசுவே நான் ஆராதிப்பேன்

உம்மை அன்றி யாரை நான் நம்பிடுவேன்

உம்மைதான் இயேசுவே நான் நம்பிடுவேன்-2

ஆராதனைக்குரியவரே என்றும் ஆராதிக்க சிறந்தவரே

என் நம்பிக்கைக்கு உரியவரே

நான் நம்பிடும் கன்மலையே-2

உயிருள்ள தெய்வமாய் நீர் மட்டுமே இருக்க-2

இயேசுவே உம்மையன்றி யாரை நான் ஆராதிப்பேன்-2

நம்பிக்கையின் தெய்வமாய் நீர் மட்டுமே இருக்க-2

இயேசுவே உம்மை யன்றி யாரை நான் நம்பிடுவேன்-2

சத்திய வசனம் உம்மிடத்தில் இருக்க-2

இயேசுவே உம்மையன்றி யாரை நான் ஆராதிப்பேன்-2

நித்தியமே நீர் என்னில் வசிக்க-2

இயேசுவே உம்மையன்றி யாரை நான் நம்பிடுவேன்-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு