துதிப் பாடல்கள்

உம்மையே ஆராதிப்பேன்

Ummaiyae Aaraadhippen

உம்மையே ஆராதிப்பேன்

என் உயிர் உள்ள நாளெல்லாம்

ஆராதனை ஆராதனை – 2

1. கருவில் உருவாகும் முன்னே உம்

கண்கள் என்னை கண்டதே – 2

இரட்சணியத்தின் சந்தோஷம் தந்து

என்னையும் உயிர்ப்பித்தீரே (2)

ஆராதனை ஆராதனை

ஜீவனுள்ள நாளெல்லாம் (2)

2. எளியவனான என்னையும் நீரே

உம் கரம் கொடுத்து தூக்கினீரே (2)

எல்லையில்லா கிருபையும் தந்து

எந்தாளும் வாழச்செய்தீர் (2)

3. பெலவீனன் என்னையும் நீரே

உம் பெலத்தால் இடைகட்டினீரே (2)

காண்டாமிருகத்தின் பெலன் தந்து

என்னையும் உயர்த்தினீரே (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு