துதிப் பாடல்கள்

உம்மைத் தவிர வேறொரு

Ummaith Thavira Veroru

உம்மைத் தவிர வேறொரு கன்மலை

இப்பூவினில் இல்லையே (2) என் இயேசுவே

1. கவலைகள் போக்க கண்ணீர் துடைக்க

வேறொரு கரம் இல்லையே - 2

காயப்பட்ட கரத்தினால் கண்ணீரை துடைக்கும்

கர்த்தர் இயேசு கரம் அல்லவோ - 2

2. தீராத நோய்களை தீர்திட வல்ல

ஒளஷதம் வேறு இல்லையே - 2

உமது இரத்தமே நோய்களை குணமாக்கும்

மாறாத ஒளஷதமே என் இயேசுவே - 2

3. எங்கே ஒடுவேன் யாரிடம் செல்லுவேன்

யார் என்னை ஆதரிப்பார் - 2

விசாரித்து காக்கும் போஷித்து நடத்ததும்

கல்வாரி அன்பல்லவோ என் இயேசுவே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு