உம்மைதான் நம்பி வந்தேன் இயேசையா
கண்ணீரைத் துடைத்திடுமே இயேசையா
இயேசையா என் இயேசையா
நிந்தனைகள் ஒரு பக்கம்
அவமானம் ஒரு பக்கம்
வாழ்க்கையில் ஏனோ இந்த கஷ்டம்
நிந்தனை மாற்றிடுமே
அவமானம் மாற்றிடுமே
எந்தனின் கண்ணீரை
உந்தனின் பாதத்தில்
வைத்துள்ளேன்னே இயேசுவே
கண்ணீரை துடைத்திடுமே
கவலைகள் போக்கிடுமே
அன்னாளின் கண்ணீரை
கண்ட என் தேவனே
எந்தனின் கண்ணீரையும் மாற்றீடுமே
குறைவை நீக்கிடுமே
ஆசீர்வதித்தீடுமே