உம்மை விட்டு எங்கே போவேன்
நீர் என்னை விட்டால் எங்கே வாழ்வேன் - 2
நீரே என் சொந்தம்
நீரே என் தஞ்சம்
நீரே என் தெய்வமே...ஓ - 2
உம்மோடு வாழ்ந்த ஒவ்வொரு நாளும்
மகிமை எனக்குத்தந்தீர் - 2
உம்மை விட்டு பிரிந்தேன் பாவத்திலே விழுந்தேன்
நீர் தந்த மகிமையை இழந்து விட்டேன் - 2
மன்னியுமே இயேசய்யா - 2
வழிமாறி போன ஆட்டைப் போல (உம்)
வழியை நான் மறந்தேன் - 2
உம்முடைய கோபம் ஒரு நிமிஷம் தானே
உம்முடைய தயவோ பல வருஷம்
தகப்பனை மறந்த பிள்ளையைப்போல
உம்மை நான் மறந்தேன் - 2
உம்மை விட்டு பிரிந்த கெட்டகுமாரன் நான்
என்னை மீண்டும்
சேர்த்துக்கொள்ளும் தகப்பனே - 2