துதிப் பாடல்கள்

உம்மை தினம் பார்ப்பேன்

Ummai Thinam Paarppen

உம்மை தினம் பார்ப்பேன்

உம்மோடு தான் நடப்பேன்

உம் சித்தம் செய்து தினம் வாழ்ந்திடுவேன்

நீரே என் அன்புத் தந்தை

நான் உந்தன் செல்லப்பிள்ளை

உம்மோடு தினம் தினம் மகிழ்ந்திருப்பேன்

அன்புக்கும் நீரே பண்புக்கும் நீரே

மீட்புக்கும் நீரே இயேசையா

கண்ணுக்கும் நீரே கருத்துக்கும் நீரே

மனசுக்கும் நீரே ஏசையா

உந்தன் அன்பு பெரியது

உந்தன் அன்பு சிறந்தது

உம்மோடு தினம் தினம் மகிழ்ந்திருப்பேன்

கிருபையும் நீரே இரக்கமும் நீரே

மகிமையும் நீரே ஏசையா

எண்ணத்தில் நீரே உள்ளத்தில் நீரே

உரிமையும் நீரே ஏசையா

உந்தன் தயை பெரியது

உந்தன் கிருபை சிறந்தது

உம்மோடு தினம்தினம் மகிழ்ந்திடுவேன்

எந்தனின் கண்கள் உந்தனுக்காக

ஒவ்வொரு நாளும் காத்திருக்கும்

எந்தனின் ஜீவன் உந்தனுக்காக

ஒவ்வொரு நிமிஷமும் பார்த்து இருக்கும்

உந்தன் பாசம் பெரியது

உந்தன் மகிமை சிறந்தது

உம்மோடு தினம்தினம் மகிழ்ந்திடுவேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு