துதிப் பாடல்கள்

உம்மை போல ஒருவரில்ல

Ummai Pola Oruvarilla

உம்மை போல ஒருவரில்ல

உலகத்திலே நானும் சொல்ல

உம்மை நான் நினைத்திடுவேன்

உம்மை நம்பி வந்து விட்டேன் - 2

வேறு எங்கும் போவதில்ல

உம்மில் தான் நிலைத்திருப்பேன்

தேவனே ஜீவனே - 2

துதிக்கும் போது மகிழ்ந்திடுவீர்

ஜெபித்தபிறகு பதில் தருவீர் - 2

துன்பமெல்லாம் தீர்ப்பவரே

துரத்தினாலும் சேர்ப்பவரே - 2

கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர்

கவலை நீக்கி நடத்திடுவீர் - 2

கண்ணின் மணி போல் காப்பவரே

கழுகு போல சுமப்பவரே - 2

பாவம் போக்கும் பரிசுத்தரே

வியாதி நீக்கும் மருத்துவரே - 2

நன்மை செய்யும் நல்லவரே

வாழ்வு தந்த வள்ளல் நீரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு