துதிப் பாடல்கள்

உம்மை நினைக்காமல் இருக்க முடியுமா

Ummai Ninaikkaamal Irukka Mudiyumaa

உம்மை நினைக்காமல் இருக்க முடியுமா

இயேசையா உம்மை மறந்தால்

நான் நிலைக்க முடியுமா-2

உம்மை துதிக்ககாமல் இருக்க முடியுமா

இயேசையா துதி மறந்தால்

என் துயரம் தீருமா

என் தனிமையிலே நான் உம்மை நினைக்கிறேன்

தாகத்தோடு தினமும் உம்மை துதிக்கிறேன்-2

என் எளிமையிலேயே நான் உம்மை நினைக்கிறேன்-2

ஏக்கத்தோடு தினமும் உம்மை துதிக்கிறேன்

நான் ஏக்கத்தோடு தினமும் உம்மை துதிக்கிறேன்

என் வழிகளெல்லாம் நான் உம்மை நினைக்கிறேன்

வாஞ்சையோடு தினமும் உம்மை துதிக்கிறேன்-2

என் உறக்கத்திலும் நான் உம்மை நினைக்கிறேன்-2

உயிர் பிரியும் வரை உம்மை நான் துதித்திடுவேன்

இயேசுவே உயிர் பிரியும் வரை உம்மை துதித்திடுவேன்

என்னில் கறைபடாமல் நான் உம்மை நினைக்கிறேன்

கற்போடு தினமும் உம்மை துதிக்கிறேன்-2

என் நெருக்கத்திலே நான் உம்மை நினைக்கிறேன்-2

நெருங்கி வந்து தினமும் உம்மை துதிக்கிறேன்

நான் நெருங்கி வந்து தினமும் உம்மை துதிக்கிறேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு