துதிப் பாடல்கள்

உம்மை நான் நினைக்கும்போது

Ummai Naan Ninaikkumbodhu

Tamil Christian song lyrics: உம்மை நான் நினைக்கும்போது (Ummai Naan Ninaikkumbodhu). பாடல் வரிகள். More songs: உ

உம்மை நான் நினைக்கும்போது

எந்தன் உள்ளம் மகிழுது

உம்மோடு தினமும் வாழ என்

மனமும் தவிக்குது உம்மை

நான் துதிக்கும் போது என்

ஜீவன் பாடுது என்னுயிரே

ஏசையா என்றே மனம் நாடுது

உம்மை தினம் பார்க்கையில்

உம்மை தினம் துதிக்கையில்

என் உள்ளமும் நிரம்பி வழியுது - 2

ஏசையா உள் மனமும் பாடி போற்றுது

பரலோக மகிமையை

விட்டு இறங்கி வந்தீரே

பரனே என்னை தேடி வந்தீரே

ஏசையா பாசம் காட்டி மீட்டுக் கொண்டீரே

மனசு நொந்து தவிக்கையில்

துக்கமாக இருக்கையில் உம்மை

நினைச்சா மாறிப் போகுமே

எந்தன் வேதனையும் பறந்து போகுமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு