துதிப் பாடல்கள்

உம்மை ஆராதிப்பேன் ஆசையாய்

Ummai Aaraadhippen Aasaiyaay

உம்மை ஆராதிப்பேன் ஆசையாய்

உம்மை ஆராதிப்பேன் இயேசுவே (2)

நீர் உயர்ந்தவர்

துதிக்குப் பாத்திரர்

உம்மைப்போல யாருமில்லை

நீர் உன்னதர்

அழகில் சிறந்தவர்

உம்மைப்போல யாருமில்லை(2)

1 ஏழையாம் என்னைக் காருண்யத்தாலே

உயர்த்தி அழகு பார்த்தீர் (2)

(நீர் உயர்ந்தவர்)

2. தனிமையில் இருந்தேன்

தள்ளாடி நடந்தேன்

தகப்பன் நீர்தாங்கினீரே (2)

(நீர் உயர்ந்தவர்)

3. தடைகளை உடைப்பவர்

நம்முன்னே செல்கிறார்

பயமின்றி முன்செல்லுவோம் (2)

(நீர் உயர்ந்தவர்)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு