உமக்கு நிகரானவர் எவருமில்லை
உம்மைத் தவிர வேறே தேவனுமில்லை-2
தேவனே என் தேவனே-நீர்
என்னுடைய தேவனே
நீர் பெரியவர் என்றும் சிறந்தவர்
எல்லா தேவர்களிலும் நீரே உயர்ந்தவர் -2
1- அதிகாலமே உம்மைத் தேடுவேன்
ஆனந்த சத்தமிட்டுப் பாடுவேன்-2
தாகத்தோடு ஆத்துமா உமக்காய் ஏங்குதே
வல்லமையின் ஆவியை ஊற்றுமே-2
2- வாழ்நாளெல்லாம் உம்மைத் துதித்திட
வரங்களினாலே என்னை நிரப்புமே -2
3-பேய்களை ஓட்டும் வரம் தாருமே
நோய்களை போக்கி பெலன் கூட்டுமே-2
4-தடைகளை உடைத்து முன்னே சென்றிட
வல்லமை வரங்களாலே
5- உள்ளத்தில் தேவ அன்பை ஊற்றுமே
உமக்காய் வாழ கிருபை தாருமே-2