உமக்கு நன்றி சொல்லவே
நானும் பிறந்தேன் இயேசையா
உம்மைப் போற்றிப் பாடவே நானும்
வளர்ந்தேன் இயேசையா -2
நன்மைகள் செய்திடவே நீயும் பிறந்தீரே
உம்மையே எனக்காய் தியாகம் செய்தீரே-2
ஏன் இந்த வாழ்க்கை என்று
எண்ணி நான் தவித்த பொழுது -2
உமக்காகத் தானே என்று
என் காதில் சொன்னீரே-3
உங்க பேரை உச்சரிக்க
உரிமை இல்லாத பொழுது-2
என் பேரை சொல்லி அழைத்து
உங்க உரிமை ஆக்கினீரே-3
என் கால்கள் சறுக்கும் பொழுது
நழுவாமல் பாதுகாத்து-2
மான் கால்கள் போல என்னை
உமக்காய் ஓட வைத்தீர்-3
எத்தனை நாள் நான் இருப்பேன்
எனக்கே தெரியவில்லை -2
அத்தனை நாள் நன்றி சொல்லி
போற்றிடுவேன் உம்மையே-3