உமக்கென நான் வாழ்வேன்
புவிதனிலே என்னை
மறவாதிரும் என்றும்
என் இயேசுவே என் இயேசுவே - 2
1. துன்பமும் துயரமும் சூழ்ந்தாலும்
நான் உம்மை மறவேனய்யா...அ - 2
உம்மையே நம்பியே வாழ்ந்திடுவேன் - 2
உயிர் உள்ள நாளெல்லாமே - இயேசுவே -2
உமக்கென நான் வாழ்வேன்
உமக்கென தான் வாழ்வேன்
2. கண்ணீரும் கவலையும் பெருகினாலும்
நான் உம்மை தொழுவேனய்யா ...அ... - 2
உம்மையே அண்டியே வாழ்ந்திடுவேன் - 2
3. வியாதியும் வறுமையும் தொடர்ந்தாலும்
நான் உம்மை துதிப்பேனய்யா..அ.... - 2
உம்மையே எண்ணியே வாழ்ந்திடுவேன் - 2