துதிப் பாடல்கள்

உம் வசனம் என்னை தேற்றிடுமே

Um Vasanam Ennai Thetridumae

உம் வசனம் என்னை தேற்றிடுமே

உம் வசனம் என்னை நடத்திடுமே

வசனங்கள் எல்லாம் அற்புதமே

வார்த்தைகள் எல்லாம் ஆரோக்கியமே

மகிமையின் வசனமே

இயேசுவின் வசனமே

இனிமையே உன் வசனம்

அது இருளையும் அகற்றிடுமே

மதுரமே உன் வசனம்

அது ஆத்துமாவைத் தேற்றிடுமே

ஜீவனே உம் வசனம்

புது ஜீவனை கொடுத்திடுமே

பெலனே உன் வசனம்

புது பெலத்தினால் நிறைத்திடுமே

ஜெயமே உன் வசனம்

அது வெற்றியை தந்திடுமே

விடுதலை உம் வசனம் தினம்

விடுவித்து காத்திடுமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு