உம் பிரசன்னத்தால் என்னை நிரப்புமே
உம் மகிமையால் என்னை மூடிடுமே – 2
அழகே என் உயிரே
அணைக்கும் ஆதரவே
அன்பின் இயேசுவே நீர் வாருமே – 2
உம் தயவால் என்னை தாங்குமே
உம் கரத்தால் என்னை நடத்துமே – 2
1. பரலோக காற்றாக
உன்னத பெலனாக
அக்கினி நாவாக
என் மேல் வாருமே – 2
நீர் என்னில் நான் உம்மில்
ஒன்றாக மாறுவேன்
நீர் என்னில் நான் உம்மில்
பிரியாமல் வாழுவேன் – 2
உம் தயவால் என்னை தாங்குமே
உம் கரத்தால் என்னை நடத்துமே – 2
2. வற்றாத ஊற்றாக
ஜீவ நதியாக
சத்திய ஆவியே
நீர் என்னுள் வாருமே – 2
என் பெலனே என் துணையே
என்னை தேற்றும் தெய்வமே
என் ஜெபமே என் ஜெயமே
என் முத்திரையும் நீரே – 2
ஆவியே நீர் வாருமே
மகிமையே நீர் போதுமே – 2
3. மகிமையின் மேகமாக
வழி காட்டும் தீபமாக
பரலோக பாதையில்
என்னை கொண்டு செல்லுமே – 2
நான் செல்வேன் நான் சேர்வேன்
பரலோக தேசத்தை
நான் செல்வேன் நான் சேர்வேன்
இயேசுவின் பாதத்தை – 2
மணவாளன் அவரோடு
மகிழ்வேனே நித்தியமாய் – 2
அழகே என் உயிரே
அணைக்கும் ஆதரவே
அன்பின் இயேசுவே நீர் வாருமே – 2
உம் தயவால் என்னை தாங்குமே
உம் கரத்தால் என்னை நடத்துமே – 2