உம் பாதையை எனக்குக் காட்டும் தெய்வமே
உன் சித்தத்தை வெளிப்படுத்தும் தகப்பனே
1. நான் எந்த சோர்வில் இருந்தாலும் நீர் கைவிடமாட்டீர்
நான் பலவீனத்தில் வாழ்ந்தாலும்
என்னைப் பெலப்படுத்துவீர்-2
என் தெய்வமே என் இயேசுவே
நம்பி வந்தேன் உம்மை தானே
உன் நேசக்கரம் இன்றும் என்றும் என்னை தாங்குமே
2. என் ஊழியப் பாதையில்
என்னை நீர் கைவிடமாட்டீர்
என் சோதனை வேளையில்
என்னை விட்டு விலகிடமாட்டீர்-2
என் தெய்வமே என் இயேசுவே
நம்பி வந்தேன் உம்மைத்தானே
உம் பாசக்கரத்தினால் பாதுகாத்து நடத்திடுவீரே